சுடச்சுட

  

  ராஜபுத்திர சமூகத்தின் ஒப்புதலின்றி ராஜஸ்தானில் "பத்மாவதி' படம் வெளியாகாது

  By DIN  |   Published on : 05th March 2017 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய திரைப்படமான "பத்மாவதி', ராஜபுத்திர சமூக தலைவர்களுக்குக் காண்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகே ராஜஸ்தான் மாநிலத்தில் வெளியிடப்படும் என்று மாநில அமைச்சர் புஷ்பேந்திர சிங் உறுதியளித்தார்.
  "பத்மாவதி' திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அந்தத் திரைப்படத்துக்கு ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த "கர்ணீ சேனை' என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
  இந்நிலையில், ஜெய்ப்பூரில் சட்டப்பேரவை வளாகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, மாநில எரிசக்தித் துறை அமைச்சர் புஷ்பேந்திர சிங் பங்கேற்றுப் பேசினார். அவர், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்குக் காண்பிக்கப்படாதவரை, ராஜஸ்தானில் "பத்மாவதி' திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.
  அமைச்சருக்கு மிரட்டல் கடிதம்: இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள அக்பர் கோட்டையின் பெயர் மாற்றப்பட்டதற்காக, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
  இதுதொடர்பாக, அஜ்மீர் காவல் நிலைய அதிகாரி பி.எல்.மீனா, சனிக்கிழமை கூறியதாவது:
  "அக்பர் கோட்டை' என்ற பெயரை "அஜ்மீர் அருங்காட்சியகம்' என்று ராஜஸ்தான் அரசு சில மாதங்களுக்கு முன் பெயர் மாற்றம் செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வாசுதேவ் தேவனானிக்கு தரன்னும் சிஸ்டீ என்பவர் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ""கோட்டையின் பெயர் மாற்றியதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வந்த அந்த மிரட்டல் கடிதத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் 12-ஆம் தேதி அமைச்சர் ஒப்படைத்தார். அதையடுத்து, அந்தக் கடிதத்தை எழுதியவர் யாரென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai