சுடச்சுட

    

    ராமர் கோயில் கட்டுவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவு: விஎச்பி

    By DIN  |   Published on : 05th March 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்கப்படும்' என்று விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.
    உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது, ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டாத நிலையில், கோயிலை கட்டுவதற்கு விஎச்பி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா? என்று தொகாடியாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
    அதற்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:
    ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், நாங்கள் ஏதேனும் செய்தாக வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்கப்படும். பின்னர், கோயில் கட்டுமானப் பணிகளுக்கான நடைமுறைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
    ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாக முடிவுகளால் அங்குள்ள இந்தியர்கள் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் ஹிந்துக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
    காஷ்மீரில் இருந்து பின்வாங்காவிட்டால், இந்தியா பேரழிவைச் சந்திக்கும் என்று பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொகாடியா, "பாகிஸ்தானுக்கு துப்பாக்கிகளாலும், பீரங்கிகளைக் கொண்டும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai