சுடச்சுட

    

    மேற்கு வங்க மாநிலம், பஹராம்பூர் நகரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான போலி ரூ.2000 நோட்டுகளை வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    பஹராம்பூரில் போலி ரூபாய் நோட்டுகள் சனிக்கிழமை கைமாற்றப்பட இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, அந்நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டோம். அப்போது, ஆலம் ஷேக் என்பவரின் பையில் போலி ரூ.2000 நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai