சுடச்சுட

  

  "மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு, எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த மாநில பாஜக பொதுச் செயலர் விஜய் பகதூர் பதக் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  தங்களுக்கு வாக்களிப்பதற்காக பிற கட்சிகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, சமாஜவாதி கட்சிக்கே வாக்களிக்கும்படி அகிலேஷ் யாதவ் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு மாநில முதல்வராக இருந்துகொண்டு இவ்வாறு பேசியுள்ளதன் மூலம் அவர் அந்தப் பதவியின் மாண்பைக் குலைத்துவிட்டார்.
  இதுபோன்ற சிறுபிள்ளைத்தனம் காரணமாகவும், தவறான கொள்கைகளாலும்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கி வரும் நிதி மாநில மக்களைச் சென்று சேராமல் உள்ளது.
  இதுதவிர சட்டம், ஒழுங்கு நிலைமையும் மோசமடைந்து, மாநிலம் முழுவதும் காட்டாட்சி நடைபெற்று வருகிறது என்றார் விஜய் பகதூர் பதக்.
  பதோஹி தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், "தங்களுக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கும் சில கட்சிகள் பணம் தருவதாகக் கேள்விப்பட்டேன். அப்படி யாராவது கொடுத்தால் அந்தப் பணத்தை உங்களிடமே வைத்துக் கொண்டு, எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
  ஏற்கெனவே, இதே போன்ற கருத்தைத் தெரிவித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை தேர்தல் ஆணையம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai