சுடச்சுட

    

    வாக்கு கணிப்புகளுக்கான தடை: மார்ச் 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு

    By DIN  |   Published on : 05th March 2017 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்பட 5 மாநில பேரவைத் தேர்தல்களையொட்டி, வாக்கு கணிப்புகள் (தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு) நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மார்ச் 9-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
    முன்னதாக, மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி 5 மாநில தேர்தல்கள் நிறைவடையும் மார்ச் 8-ஆம் தேதி வரை வாக்கு கணிப்புகளுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
    ஆனால், உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதிக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்டில், கர்ணபிரயாக் என்ற தொகுதி தவிர 69 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. கர்ணபிரயாக் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் களத்தில் இருந்த குல்தீப் சிங் கன்வாசி என்ற வேட்பாளர், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து, அந்த தொகுதிக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai