சுடச்சுட

  

  வாராணசியில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிவிட்டார் மோடி

  By DIN  |   Published on : 05th March 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "வாராணசியில் தேர்தல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் பிரசாரப் பேரணி நடத்தியதன் மூலம் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார்' என்று காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 6-ஆவது கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், 7-ஆவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாராணசியில் பிரதமர் மோடி சனிக்கிழமை பிரசாரப் பேரணி மேற்கொண்டார்.
  இந்தப் பேரணிக்கு, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து முன்அனுமதி பெறவில்லை என்று காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
  இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில், "முன்அனுமதி பெறாமல் பிரசாரப் பேரணி மேற்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார்.
  எனவே, மோடி உள்பட அந்த பேரணியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சட்ட, மனித உரிமைகள் பிரிவு செயலாளர் கே.சி.மிட்டல், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாராணசி தெற்கு, வாராணசி கன்டோன்மென்ட், வாராணசி வடக்கு என மூன்று பேரவைத் தொகுதிகளில் பிரதமரின் பேரணி நடைபெற்றிருக்கிறது. மேலும், காசி விசுவநாதர் கோயிலுக்கும், கால பைரவர் கோயிலுக்கும் அவர் சென்றிருக்கிறார்.
  தேர்தல் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறாமலேயே இவையனைத்தும் நடைபெற்றிருக்கின்றன என்றார் கே.சி.மிட்டல்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai