சுடச்சுட

  

  வாராணசியில் ராகுல் - அகிலேஷ் திறந்த வாகனத்தில் பிரசாரம்

  By DIN  |   Published on : 05th March 2017 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul

  உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் சனிக்கிழமை நடைபெற்ற திறந்த வாகனப் பேரணியில் பங்கேற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்.

  உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜவாதித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
  பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் சனிக்கிழமை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு இணையாக, வாராணசியில் உள்ள கச்சேரி நகரில் இருந்து மதியம் 3 மணியளவில் திறந்த வாகனப் பிரசாரம் தொடங்கியது. ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் பேருந்தின் மீது நின்றுகொண்டு, வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.
  செளககாட் என்ற இடத்தருகே வந்தபோது, அங்கு திரண்டிருந்த சமாஜவாதி தொண்டர்களுக்கும், பாஜக ஊடக மையத்தில் இருந்த கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். உடனடியாக, அவர்கள் மீது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
  பேரணியின் இடையே, அகிலேஷ் யாதவின் மனைவியும், சமாஜவாதி எம்.பி.யுமான டிம்பிள் யாதவும் வாகனப் பேரணியில் இணைந்து கொண்டார். அகிலேஷ், ராகுல் காந்தி, டிம்பிள் யாதவ் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் பிரசாரம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
  சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்களும், மக்களும் வாகனப் பேரணியை வரவேற்று தங்களது கரங்களை அசைத்தனர். கச்சேரி நகரில் தொடங்கிய அந்தப் பேரணி மாலையில், 10 கி.மீ. தொலைவில் உள்ள மைடாகின் நகரில் நிறைவடைந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai