சுடச்சுட

    

    வெளிமாநில அமைச்சர்களுக்கு திருமலையில் பாதுகாப்பு இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    By DIN  |   Published on : 05th March 2017 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajendrabalaji

    திருமலைக்கு வரும் வெளிமாநில அமைச்சர்களுக்கு ஆந்திர மாநில அரசு பாதுகாப்பு அளிப்பது இல்லையென தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவருடன் 9 பேரும் வந்திருந்தனர். தேவஸ்தானம் அமைச்சர்களுக்கு எல்-1 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் அளிப்பது வழக்கம். அதன்படி தேவஸ்தானம் ராஜேந்திர பாலாஜியுடன் வந்த 6 பேருக்கு எல்-1 பிரேக் தரிசனத்துக்கான டிக்கெட் வழங்கியது.
    ஆனால் அவர் தன்னுடன் வந்த அனைவருக்கும் எல்-1 தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளிடம் வற்புறுத்தினார்.
    இதையடுத்து தேவஸ்தானம் அவருடன் வந்த 9 பேருக்கும் எல்-2 தரிசன டிக்கெட் வழங்கியது. ஆனால் அதனை ஏற்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்து விட்டார். அவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவருடன் வந்த 9 பேருக்கும் எல்-1 தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.
    சனிக்கிழமை அதிகாலை ஏழுமலையானை வழிபாடு செய்துவிட்டு வந்த அமைச்சருக்கு தேவஸ்தானம் சிறப்பு பிரசாதம் வழங்கியது.
    இந்நிலையில் கோயிலை விட்டு வெளியில் வந்த அவர், நேராக திருப்பதி பத்திரிகையாளர் சங்கத்துக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நக்ஸலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதி. எனவே ஏழுமலையானை வழிபட வரும் வெளி மாநில அமைச்சர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஆந்திர மாநில அரசின் கடமை. ஆனால் எனக்கு பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு தவறிவிட்டது. திருமலைக்கு வரும் அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்றுக் கொள்வது யார்?. மேலும் தரிசன டிக்கெட் வழங்குவதில் பிரச்னை ஏற்படுத்திய தேவஸ்தானத்தையும், தனக்கு பாதுகாப்பு அளிக்காத ஆந்திர அரசின் செயலுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai