Enable Javscript for better performance
ஹிஸ்புல் பயங்கரவாதி சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் டிரால் பகுதியில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
    இதுதொடர்பாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான டிராலில் உள்ள ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 4-5 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
    சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தபோது, பாதுகாப்புப் படையினர் மீது வீட்டுக்குள் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டு, வீட்டுக்குள் நுழைந்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றவர்கள், வீட்டுக்குள் பதுக்கி இருந்தபடி தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அந்த வீட்டின் பாதி பகுதி, பாதுகாப்புப் படையினரின் வசம் வந்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai