Enable Javscript for better performance
3 ஆண்டுகளில் நிறைவேற்றிய பணிகளை மோடி பட்டியலிடத் தயாரா?- Dinamani

சுடச்சுட

    

    3 ஆண்டுகளில் நிறைவேற்றிய பணிகளை மோடி பட்டியலிடத் தயாரா?

    By DIN  |   Published on : 05th March 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Akilesh

    பிரதமர் நரேந்திர மோடி தனது 3 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றியுள்ள பணிகளை பட்டியலிடத் தயாரா? என்று உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.
    உத்தரப் பிரதேச மாநிலம், படோஹியில் சனிக்கிழமை நடைபெற்ற சமாஜவாதி கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
    எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ள 10 திட்டங்களை நான் கூறுவேன். இதுபோல், பிரதமர் மோடி, 10 திட்டங்களைப் பட்டியலிடுவாரா? எனது 5 ஆண்டு கால ஆட்சி நிர்வாகம் குறித்து அறிக்கை தர தயாராக இருக்கிறேன். இதேபோல், பிரதமர் மோடியும், மத்தியில் தனது 3 ஆண்டுகால ஆட்சி
    நிர்வாகம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
    வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு பணம் கொடுக்கப்பட்டால், அதைப் பெற்றுக் கொண்டு, தேர்தலில் சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்துவிடுங்கள். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உயிருடன் இருக்கும்போதே தனக்கு நினைவகங்களை எழுப்பிக் கொண்டார். அவர் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி தற்போது பேசி வருகிறார்.
    அவர் (மாயாவதி), எனது அத்தை போன்றவர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவர் பாஜகவுடன் கைகோக்க வாய்ப்புள்ளது. எனவே, வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாநிலத்தில் சமாஜவாதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடுதல் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார் அகிலேஷ் யாதவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai