சுடச்சுட

  

  ""வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்குப் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால் தேர்தலில் "சைக்கிள்' சின்னத்துக்கு வாக்களித்து விடுங்கள்'' என்று கூறிய உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.
  இதுதொடர்பாக, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் மனோஜ் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  அகிலேஷ் யாதவ், தேர்தல் விதிகளை மீறியதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் ஜே.பி.எஸ்.ராத்தோர் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
  இதற்கு முன்பு, லக்னெüவில் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "பத்திரிகைத் துறை நண்பர்களே! இந்தத் தேர்தலில் எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்; பிறகு உங்களுக்கு சன்மானம் தருகிறேன்'' என்றார். இதிலிருந்து அவர் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது தெளிவாகிறது. அதனால், பணம் கொடுப்பது பற்றி அகிலேஷ் யாதவ் பேசி வருகிறார் என்றார் மனோஜ் மிஸ்ரா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai