சுடச்சுட

  
  sushma-swaraj

  அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அங்காடி உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
  அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம், லன்காஸ்டர் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஹார்னிஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினரை நமது தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.
  இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஹார்னிஷ் படேலைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
  இதுதவிர, வாஷிங்டனில் துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீக்கிய-அமெரிக்கர் தீப் ராய் குடும்பத்தினருடன் பேசி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் சுட்டுரையில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
  லன்காஸ்டர் நகரில் பல்பொருள் அங்காடி நடத்தி வந்த ஹார்னிஷ் படேல் (43), அவரது வீட்டின் முன்பு துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் கடந்த வியாழக்கிழமை இறந்து கிடந்தார்.
  இந்தப் படுகொலைக்கு இனப் பிரச்னை காரணமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai