Enable Javscript for better performance
காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் உள்பட மூவர் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    
    kashmir

    தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவரும், பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    டிரால் பகுதியில், தச்சு வேலை செய்பவரின் வீட்டில் 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர், ராணுவத்தினர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்புப் படை அங்கு சென்று சோதனை செய்தது.
    அப்போது, அங்கிருந்து வெளிப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
    சனிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த துப்பாக்கிச் சண்டை, ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரை நீடித்தது.
    இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    அவர்களில் ஒருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஆக்யூப் பட் என்பதும், மற்றொருவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சைஃப் உல்லாஹ் என்கிற ஒஸாமா என்பதும் தெரியவந்தது.
    இந்தச் சண்டையில், காவலர் மன்சூர் அகமது நியாக் என்பவர் குண்டடிபட்டு உயிரிழந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    டி.ஜி.பி. இரங்கல்: காவலர் மன்சூர் அகமது உயிரிழந்தது தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் தெரிவிக்கையில், "வீர மரணம் அடைந்த மன்சூர் அகமது துணிச்சலான வீரர்; அவர் தீரத்துடன் போரிட்டு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளார்' என்று குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai