Enable Javscript for better performance
சாக்ஷி மாலிக் புகார்: ஹரியாணா அமைச்சர் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறிய புகாருக்கு ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    "ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றால் நிறைவேற்றுவதாக கூறிய சில வாக்குறுதிகளை ஹரியாணா மாநில அரசு இன்னும் நிறைவேற்றவில்லை' என்று சமூக வலைதளமான சுட்டுரையில் சாக்ஷி மாலிக் புகார் தெரிவித்திருந்தார்.
    அவரது புகாருக்கு பதிலளிக்கும் வகையில் அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ், சண்டீகர் நகரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய அன்றே சாக்ஷி மாலிக்குக்கு மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, ரூ.2.5 கோடிக்கான காசோலை ஒப்படைக்கப்பட்டது. ரோத்தக் நகரில் உள்ள மகரிஷி தயாநந்த் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறையில் இயக்குநராக தன்னை நியமிக்க வேண்டும் என்று சாக்ஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
    அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் சில விதிமுறைகள் திருத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் அவர் கோரிய பதவி கிடைத்துவிடும் என்பது அவருக்கே நன்கு தெரியும்.
    இந்தச் சூழ்நிலையில், யாருடைய தூண்டுதலின்பேரில் அவர் இதுபோன்ற புகார் ஹரியாணா அரசுக்கு எதிராக முன்வைத்துள்ளார்.
    தனது பயிற்சியாளர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்று சாக்ஷி கோரிக்கை விடுத்துள்ளார். 4 பயிற்சியாளர்களுக்கு வெகுமதி வழங்க முடியாது. ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்து அவரது பெயரை அறிவித்தால் அவருக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அனில் விஜ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai