Enable Javscript for better performance
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: லாகூரில் இந்தியா-பாக். பேச்சுவார்த்தை- Dinamani

சுடச்சுட

    

    சிந்து நதி நீர் ஒப்பந்தம்: லாகூரில் இந்தியா-பாக். பேச்சுவார்த்தை

    By DIN  |   Published on : 06th March 2017 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக, லாகூரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே, வரும் 20, 21-ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டு அரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
    1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுக்கொரு முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்படி, லாகூரில், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வருடாந்திர பேச்சு வார்த்தைக் கூட்டத்தில், இந்தியத் தரப்பில் இருந்து சிந்து நதி நீர் ஆணையரும், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். இதற்கு முன்பு, இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai