சுடச்சுட

    

    நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம்

    By DIN  |   Published on : 06th March 2017 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் ஆகிய பகுதிகளுக்கு இடம் அளிக்கக்கோரி மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மசோதா தாக்கல் செய்துள்ளார்.
    மக்களவையில் தனிநபர் மசோதா பிரிவில் இந்த மசோதாவை அவர் கொண்டு வந்துள்ளார். அதில், மக்களவையில் அந்தப் பகுதிகளுக்கு 5 இடங்களும், மாநிலங்களவையில் ஓரிடமும் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 370ஏ என்ற புதிய பிரிவை சேர்க்க வேண்டும் எனவும் மசோசாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து துபே கூறியதாவது: பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கும் இந்தப் பகுதிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவையில் 25 இடங்கள் உள்ளன. ஆனால் அந்த இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், இந்தப் பகுதியை மக்களவை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
    அந்தப் பகுதிகளுக்கு மக்களவையில் உரிய இடங்கள் அளிக்கப்பட வேண்டும். அங்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியாது என்பதால், அந்த இடங்களை காலியாக வைத்திருக்கலாம்.
    வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பாதி அமர்வில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன். இந்த முக்கிய மசோதா குறித்து அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். இதை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது மசோதாவின் நோக்கம் என்றார் துபே.
    இந்த மசோதாவை இதற்கு முன்பு கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் 2 முறை துபே கொண்டு வர முயன்றார். ஆனால், மக்களவை துணைத் தலைவர் அனுமதியளிக்கவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai