சுடச்சுட

  

  பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: பிற்போக்குத்தனமான நடவடிக்கை

  By DIN  |   Published on : 06th March 2017 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pc

  குறிப்பிட்ட சில எண்ணிக்கைக்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு சில பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் கட்டணம் விதிப்பதற்கு முடிவு செய்திருப்பது பிற்போக்குத் தனமான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ""பணம் எடுப்பதற்கும், பணம் செலுத்துவதற்கும் வங்கிகள் கட்டணம் வசூலிப்பது பிற்போக்குத்தனமான நடவடிக்கை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
  மேலும், ""வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பணத்தை ஒரே தவணையில் வங்கியில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டால், வங்கிகள் மகிழ்ச்சியடையுமா?'' என்று மற்றொரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், மாதத்தில் 4 தவணைகளுக்கு மேல் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் குறைந்தபட்சமாக ரூ.150-ஐ கட்டணமாக வசூலிக்கின்றன. ஆனால், பணப் பரிவர்த்தனைகளைக் குறைத்து மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai