சுடச்சுட

  

  பரிசுப் பொருள் வழக்கு: விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா

  By  புதுதில்லி,  |   Published on : 06th March 2017 01:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayalalitha1

  பரிசு பொருள் வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  1992-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அவருக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பரிசுப் பொருள்கள் வந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை, 2006-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.

  இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அப்போது நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு புதிய அமர்வு மூலம் விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai