சுடச்சுட

    

    பீகார் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம்: காவல் நிலையம் தீ வைத்து எரிப்பு

    By DIN  |   Published on : 06th March 2017 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பீகார் மாநிலம் பர்ஹாரா காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்ததைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர்.

    பீகாரின் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள பர்ஹாரா காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராம் சஜன் சத்வா என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார்.

    ராம் சஜன் சத்வாவை போலீஸார் கடுமையாக தாக்கியதிலேயே மரணம் அடைந்ததாகக் கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் பர்ஹாரா காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி காவல் நிலையத்திற்கு தீ வைத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீஸார் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai