Enable Javscript for better performance
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு

    By DIN  |   Published on : 06th March 2017 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விரைவில் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
    இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு அளிக்கப்படவுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பணவீக்கத்துக்கு ஏற்ப கணக்கிடப்பட்டு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. எனினும், தொழிலாளர் சங்கங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு திருப்ப அளிக்காது என்றே தெரிகிறது. ஏனெனில், விலை உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி இருப்பதில்லை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
    இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறுகையில், "ஏற்கெனவே அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கணக்கீட்டு முறைப்படி 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் விலைவாசி உயர்வு கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. எனினும், இதில் கூறப்படுவதைவிட பொருள்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது என்றார்.
    கடந்த 2016-ஆம் ஆண்டில் 6 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அடிப்படை ஊதியத்தில் 125 சதவீதம் அகவிலைப்படியாக இப்போது வழங்கப்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai