சுடச்சுட

  

  மோடியின் கடவுச்சீட்டு விவரங்களை வெளியிட முடியாது: சிஐசி

  By DIN  |   Published on : 06th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் மோடியின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட முடியாது; அதில் அவரது தனிப்பட்ட விவரங்கள் அடங்கியுள்ளன என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கூறியுள்ளது.
  கடவுச்சீட்டு பெற பிரதமர் மோடி அளித்த விண்ணப்பத்துடன் அளித்த ஆவணங்கள், அவரது கடவுச்சீட்டு புதுப்பிக்கப்பட்ட விவரம் ஆகியவற்றை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனக்குத் தர வேண்டுமென்று குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜி.எம். செüகான் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கோரியிருந்தார்.
  ஆனால், அவர் கோரிய விவரங்களில் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை தகவல்களும் உள்ளது என்பதால் அவற்றைத் தர முடியாது என்று கடவுச்சீட்டு அலுவலகம் மறுத்துவிட்டது.
  இந்நிலையில், மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  ஒருவரது தனிப்பட்ட விவரங்களை செüகான் கேட்பதில் பொதுநலன் இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு குஜராத் முதல்வராக இருந்தவரும், இப்போது பிரதமராக உள்ளவரின் பொதுவாழ்க்கை குறித்து மட்டுமே கேட்பதாக அவர் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்த ஆவணங்களில் அவரது தனிப்பட்ட விவரங்களும் உள்ளன.
  மேலும், மத்திய தகவல் ஆணையத்திடம் எந்த நபர் குறித்த விவரம் கேட்கப்பட்டாலும், அந்த நபருடன் ஆலோசிக்கும் விதிமுறை உள்ளது.
  பொதுநலன் கருதிதான் வேறு விவரங்களைக் கேட்பதாக மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. மோடி என்பவர் பொதுவாழ்க்கையில் உள்ளவர். எனவே, பொதுவாழ்க்கையில் அவரது செயல்பாடுகள் குறித்த விவரங்களைக் கோரினால் அவை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai