சுடச்சுட

    
    modirally

    உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் திறந்த வாகனத்தில் பயணம் செய்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடி.

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் மிகவும் பலவீனமானவர்கள்; அவர்களுக்கு எந்த ஒரு உறுதியான முடிவையும் எடுக்கத் தெரியாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது எம்.பி. தொகுதியான வாராணசியில் மோடி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
    சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்களில் யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நிலை மாறப்போவதில்லை. அகிலேஷ் யாதவ் தனது தந்தையான முலாயம் சிங் யாதவிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றார். ராகுல் காந்தி பரம்பரையாக வந்த தங்கள் குடும்பத்தினரின் மூலம் அரசியல் அதிகாரத்தை எளிதில் பெற்றார். அவர் எதையுமே கடினமாக உழைத்துப் பெற்றது இல்லை, இலவசமாகப் பெற்றே பழக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் மிகவும் பலவீனமானவர். எந்த ஒரு கடினமான, உறுதியான முடிவையும் எடுக்க அவர்களுக்குத் தெரியாது.
    ஆனால், நான் பரம்பரையாக எதையும் இலவசமாகப் பெற்று வரவில்லை. கடினமாக உழைத்து அடிமட்டத்தில் இருந்து முன்னேறி வந்துள்ளேன். காசி மக்களின் ஆசியால்தான் எனக்கு பதவி கிடைத்துள்ளது. நமது நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீட்கத் தேவையான கடினமான, உறதியான முடிவுகளை என்னால் எடுக்க முடியும். அதற்கான துணிவு எனக்கு உண்டு.
    கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகியவற்றை எங்களுக்கு எதிராக திரளவைத்தது. ஆனால், நாட்டு மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
    உத்தரப் பிரதேசத்தில் உண்மையான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் இங்கு வந்துள்ளேன். இங்கு ஏராளமான சிறு வணிகர்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும்.
    அவர்கள் யாரும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பாதிக்கப்படவில்லை. ஊழலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்த அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்தான் பிரச்னைக்கு உள்ளானார்கள் என்றார் மோடி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai