சுடச்சுட

  

  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பட்டதாரி இளைஞர் கைது

  By DIN  |   Published on : 06th March 2017 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  urjith-patel

  மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பட்டதாரி இளைஞர் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி மெயில் ஒன்று வந்தது.

  அதில், நீங்கள் உங்கள் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லை என்றால், உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என்று கூறப்பட்டிருந்தது.

  மேலும், ஒரே இரவில், உனது அன்பு மகள், மகன் குண்டு வெடிப்பில் கொல்லப்படுவார்கள். அவர்களில் உடலில் உள்ள ஒரு எலும்புகள் கூட கிடைக்காது என்றும் இது எனது உரிமை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதனால், அதிர்ச்சி அடைந்த உர்ஜித் பட்டேல், இதுகுறித்து ரிசர்வ் வங்கி பொது மேலாளர் வைபவ் சதுர்வேதியிடம் கூறினார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

  இந்நிலையில், நாக்பூரில் இருந்து உர்ஜித் பட்டேலுக்கு கொலை மிரட்டல் வந்ததை சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்ததனர். இதையடுத்து நாக்பூர் விரைந்த மும்பை சைபர் கிரைம் போலீஸார், இது தொடர்பாக வைபவ் பட்டல்வார் (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்டார் வைபவ் பட்டல்வார். இதையடுத்து அவரை சைபர் கிரைம் போலீஸா கைது செய்து நாக்பூர் நீதிமன்றத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதையடுத்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர் வைபவ் பட்டல்வார் (34) என்றும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai