சுடச்சுட

  
  parliment

  புதுதில்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக வரும் 9-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்று நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அன்றே பொருளாதார ஆய்வு அறிக்கையும் தாக்கலானது. அடுத்த நாளான பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. பின்னர் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

  இந்நிலையில், வரும் 9-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், உள்துறை, ரயில்வே, ராணுவம், நிலக்கரி, விவசாயம் ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது மக்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.

  இதேபோல், மாநிலங்களவையில் தகவல் ஒலிபரப்புத்துறை, பணியாளர் நலன், ரயில்வே, குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறைகளுக்கான விவாதங்களும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai