சுடச்சுட

  

  அட்டாரி: நாட்டின் மிகப்பெரிய மூவர்ணக்கொடி ஏற்றிவைப்பு

  By DIN  |   Published on : 07th March 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ATTARIFLAG-2

  பஞ்சாப் மாநிலம், அட்டாரி அருகே உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக் கொடி, மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
  120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார். அப்போது, தனது கனவுத் திட்டம் தற்போது நனவாகியிருப்பதாக அவர் கூறினார்.
  110 மீட்டர் (360 அடி) உயரமுள்ள கம்பத்தில், இந்தக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 91.44 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியே, மிக உயரமான கம்பத்தில் பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது.
  அட்டாரி எல்லையில் தினமும் மாலையில் நடைபெறும் இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் இந்தக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
  பஞ்சாப் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதிபெற்று, இந்தத் தேசியக்கொடியேற்ற விழாவை மாநில அரசு நடத்தியுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai