Enable Javscript for better performance
அபராத விதிமுறைகள்: மறுபரிசீலனை செய்ய ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அபராத விதிமுறைகள்: மறுபரிசீலனை செய்ய ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 07th March 2017 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sbi

    வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
    சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் அபராதம் விதிக்கப்படும்; குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் அறிவித்தது.
    இதனிடையே, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட சில தனியார் வங்கி நிர்வாகங்கள், தங்கள் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் நான்குக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன.
    இது, வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த புதிய விதிமுறைகள் குறித்து மறுபரிசீலினை செய்யுமாறு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில தனியார் வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை: முன்னதாக, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை கடைப்பிடித்தால், வங்கிகளை மக்கள் புறக்கணித்துவிட்டு வீடுகளிலேயே பணத்தை முடக்கி வைக்கத் தொடங்குவார்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் விரோத நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளுமானால் இந்தப் பிரச்னை தேசிய அளவில் எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai