சுடச்சுட

  

  அமித் ஷாவின் அச்சுறுத்தலால் வாராணசியில் மோடி முகாம்: காங்கிரஸ் விமர்சனம்

  By DIN  |   Published on : 07th March 2017 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மிரட்டல் விடுத்ததால், பிரதமர் மோடி, தனது வாராணசி மக்களவைத் தொகுதியிலேயே முகாமிட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
  இதுதொடர்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து பாஜக எம்.பி.க்களுக்கும் அமித் ஷா ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். ’’ஒவ்வொரு எம்.பி.யும் தனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் குறைந்தது 3 பேரவைத் தொகுதிகளிலாவது பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.
  அவரது உத்தரவால் பீதியடைந்துள்ள பிரதமர் மோடி, தனது கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, வாராணசி மக்களவைத் தொகுதியிலேயே கடந்த 3 நாள்களாக முகாமிட்டுள்ளார்.
  இதுமட்டுமன்றி, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும், இருப்பு வைக்கவும் கட்டணம் விதிப்பது, மோட்டார் வாகன காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது, சர்க்கரை மானியத்தை ரத்து செய்வது, சமையல் எரிவாயு உருளை விலையை உயர்த்துவது என மக்கள் விரோத முடிவுகளை, சில தனிநபர்கள் பலன் பெறுவதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ளார். மறுபுறம், வங்கிகளில் கடன் ஏய்ப்பு செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.1,200 கோடி கடனையும் ரத்து செய்வதற்கு பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார்.
  இதுபோன்ற முடிவுகளின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முதுகில் குத்தி, துரோகமிழைத்துவிட்டார் மோடி என்று அஜய் குமார் கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai