சுடச்சுட

  
  Kejriwal02

  மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் சந்திரா தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
  ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்ததற்கு அடுத்த சில நாள்களில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால், இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
  அப்போது, பிரதமர் மோடியிடம் தாம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புவதாகத் தெரிவித்த அவர், கருப்புப் பணத்தை வைத்திருப்பது அதானி, அம்பானி, சுபாஷ் சந்திரா போன்றவர்களா? அல்லது சாமானிய மக்களா? என்று கேட்டார்.
  இந்தக் கேள்விக்கு கண்டனம் தெரிவித்த சுபாஷ் சந்திரா, தேவையின்றி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேஜரிவால் பேசியதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக தில்லி பெருநகர நீதிமன்றத்தில் அவர் அவதூறு வழக்குத் தொடுத்தார்.
  இந்நிலையில் அந்த வழக்கின் மீதான விசாரணை, நீதிபதி ஸ்னிக்தா சர்வாரியா முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
  இந்த விவகாரத்தில் கேஜரிவாலை நேரில் அழைத்து விசாரிப்பதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த நீதிபதி, அவரை ஜூலை 29-ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
  இதுதொடர்பான அழைப்பாணையை கேஜரிவாலுக்கு அனுப்பவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai