சுடச்சுட

  

  ஆந்திர மாநில சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன் சட்டப் பேரவைச் செயலரின் அறையில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பூஜை நடத்தியது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் அறிக்கை கோரியுள்ளனர்.
  ஆந்திரப் பிரதேச சட்ட மேலவைக்கு எம்எல்ஏக்கள் வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் போட்டியிடுகிறார்.
  வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக அவர், தேர்தல் அதிகாரியான சட்டப் பேரவைச் செயலரின் அறைக்குச் சென்றார். அங்கு மனுத் தாக்கல் செய்வதற்கு முன் நாரா லோகேஷ் பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ’தேர்தல் அதிகாரியின் அறையில் பூஜை செய்வது என்பது அப்பட்டமான விதிமீறலாகும். அவ்வாறு செய்யக் கூடாது' என்றார்.
  இந்த விவகாரம் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பன்வர் லால், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ’பூஜை தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் நான் அறிக்கை கோர உள்ளேன்' என்று தெரிவித்தார்.
  இதனிடையே, தேர்தல் அதிகாரி கே.சத்யநாராயணாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ’அந்த வேட்பாளர் (நாரா லோகேஷ்) எனது அறைக்கு வந்தபோது நான் பூஜை செய்து கொண்டிருந்தேன். அவர் என்னுடன் இணைந்து கொண்டார்' என்று அவர் பதிலளித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai