சுடச்சுட

  

  ஹிமாசலப் பிரதேசத்தில் இந்தியா-ஓமன் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பயிற்சி 14 நாள்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதற்கு முன்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருநாட்டு ராணுவ வீரர்களின் முதல் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது. பயங்கரவாதம், கலவரம், வன்முறைத் தடுப்பு ஆகியவற்றின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இருநாட்டு ராணுவத்தினரும் தங்கள் தரப்பு நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
  இந்த ராணுவப் பயிற்சியால் இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு மட்டுமின்றி ராஜீய ரீதியிலான ஒத்துழைப்பும் அதிகரிக்கும். இரு நாடுகளில் இருந்தும் தலா 60 வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai