சுடச்சுட

  
  varunganthi

  உலக அரங்கில் இந்திய தேசத்தை வல்லரசாக மாற்றிக் காட்டும் ஆற்றல் இளைய சமுதாயத்திடம் உள்ளது என்று மக்களவை எம்.பி.யும், பாஜக பிரமுகருமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

  பஞ்சாப் மாநிலம், ஃபதேகர்சாஹிப் பகுதியில் அமைந்துள்ள தேஷ் பக்த் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர், இதுகுறித்து மாணவர்களிடையே பேசியதாவது:
  உலக நாடுகள் எதற்கும் கிடைக்காத ஒரு பெருமை இந்தியாவுக்கு உண்டு. சர்வதேச அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம் என்பதே அந்தப் பெருமை.
  தற்போது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வதே இளைய தலைமுறையினர்தான். இந்தியாவை உலக அரங்கில் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் ஆற்றலும், வலிமையும் அவர்களுக்கு உள்ளது. கனவுகளையும், லட்சியங்களையும் தாண்டி சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் இன்றைய இளைஞர்கள் பாடுபடுகின்றனர் என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து பேசிய பல்கலைக்கழக வேந்தர் ஜோரா சிங், "புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai