சுடச்சுட

  

  உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்: யாத்ரிகர்களுக்கு அமர்நாத் கோயில் வாரியம் அறிவுரை

  By DIN  |   Published on : 07th March 2017 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு யாத்ரிகர்களுக்கு அமர்நாத் கோயில் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். ஆண்டுதோறும், இந்தக் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக் கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். எனினும், கடல்மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயர மலையில் இந்தக் குகை அமைந்துள்ளதால் பக்தர்கள் திடகாத்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
  இந்நிலையில், இந்தக் கோயிலுக்குப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு சில வழிகாட்டி நெறிமுறைகளை அமர்நாத் கோயில் வாரியம் வகுத்துள்ளது. அந்த வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: யாத்திரை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, தினசரி காலை, மாலை இரு வேளையும் சேர்த்து சுமார் 5 கி.மீ. தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், மூச்சுப் பயிற்சிகளை குறிப்பாக பிராணாயாமத்தை பழக வேண்டும்.
  மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். மேலும் காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தினசரி 5 லிட்டருக்கு குறையாமல் குடிநீரை அருந்த வேண்டும். மலையேறும்போது, ஆங்காங்கே ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி யாத்திரை நிறைவடைய உள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai