சுடச்சுட

    
    terrorist

    உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவின் புறநகர்ப் பகுதியில், பயங்கரவாதி பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்துள்ள பயங்கரவாதத் தடுப்பு அதிரடிப் படையினர். நாள்: செவ்வாய்க்கிழமை.

    உத்தரப் பிரதேசத்தில், ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் பயங்கரவாதி பதுங்கியுள்ள வீட்டை அந்த மாநில போலீஸார் சுற்றி வளைத்தனர்.
    இதுகுறித்து காவல்துறை (சட்டம்-ஒழுங்குப் பிரிவு) கூடுதல் தலைமை இயக்குநர் தல்ஜித் செளத்ரி கூறியதாவது:
    உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவின் புறநகர்ப் பகுதியான ககோரியிலுள்ள ஒரு வீட்டில், பயங்கரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த மாநில பயங்கரவாதத் தடுப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த (ஏடிஎஸ்) போலீஸார் அந்த வீட்டை செவ்வாய்க்கிழமை சுற்றி வளைத்தனர்.
    பொதுமக்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில், சுமார் 20 அதிரடிப் படை வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
    போலீஸார் நெருங்குவதை அறிந்ததும், அந்தப் பயங்கரவாதி அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
    உஜ்ஜைன் நகரிலிருந்து போபால் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர்.
    தற்போது ஏடிஎஸ் படையினரால் சுற்றுவளைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிக்கு, அந்த குண்டுவெடிப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai