Enable Javscript for better performance
உ.பி. முதல்வர் பொறுப்பு?: உமா பாரதி மறுப்பு- Dinamani

சுடச்சுட

    
    umabrathi

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்பட்சத்தில் தாம் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக வெளியான தகவலை மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி மறுத்துள்ளார்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.
    இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி சார்பில் நடப்பு முதல்வர் அகிலேஷ் யாதவே மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மாயாவதி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    எனினும், பாஜக கூட்டணி சார்பில் முதல்வராக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
    இதனிடையே, இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் மத்திய அமைச்சர் உமா பாரதி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியானது.
    இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் உமா பாரதி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் தான் எனது முழு கவனமும் உள்ளது. வேறு எதைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை.
    எனது வாழ்நாள் முடிவதற்குள் கங்கை நதியை தூய்மைப்படுத்திவிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த லட்சியத்தை அடைவதற்காக, எந்த எல்லைக்கும் நான் செல்லத் தயார்.
    கங்கையைத் தூய்மைப்படுத்த எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை என ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் ராகுல் பொறுமையை கைவிடலாகாது. அவர் விரும்பும்பட்சத்தில்,
    கங்கை நதியில் எந்தெந்தப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை நேரில் அழைத்துச் சென்று காண்பிப்பதற்கு தயாராக உள்ளேன் என்றார் உமா பாரதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai