சுடச்சுட

    

    உள்ளாட்சியில் பெண்களுக்கு சமவாய்ப்பு: ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

    By DIN  |   Published on : 07th March 2017 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் நோக்குடன் ஐ.நா. மகளிர் சபையுடன் இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
    உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிப்பதற்கும், தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கும் வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.நா. மகளிர் சபையுடன் மேற்கொள்ளப்பட்டது.
    இதன் மூலம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் வகையிலான சட்ட விதிகளையும், கொள்கைகளையும் வகுப்பது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை ஐ.நா. அமைப்பும், இந்தியாவும் இணைந்து மேற்கொள்ளும்.
    இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    இதையடுத்து, ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai