சுடச்சுட

    

    நாட்டின் விமானந்தாங்கி போர்க் கப்பல்களில் ஒன்றான ’ஐஎன்எஸ் விராட்', கடற்படை சேவைகளிலிருந்து திங்கள்கிழமை விடை பெற்றது.
    கடந்த 1959-ஆம் ஆண்டிலிருந்து 1984 வரை பிரிட்டீஷ் கடற்படையில் ’ஹெச்எம்எஸ் ஹெர்ம்ஸ்' என்ற பெயரில் இருந்த ’ஐஎன்எஸ் விராட்', அர்ஜென்டீனாவுடன் பிரிட்டன் மேற்கொண்ட போரில் வெற்றிபெற பக்கபலமாக விளங்கியது.
    பிறகு அந்தக் கப்பலை கடந்த 1984-ஆம் ஆண்டில் 6.5 கோடி டாலர்களுக்கு (சுமார் ரூ.433 கோடி) இந்தியா வாங்கியது. இதையடுத்து அக்கப்பல் புதுப்பிக்கப்பட்டு ’ஐஎன்எஸ் விராட்' என்ற பெயரில் இந்தியக்கடற்படையில் இணைக்கப்பட்டது. ஏறத்தாழ 30 ஆண்டுகால சேவைக்குப் பிறகு தற்போது அதற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
    வருங்காலத்தில் ’ஐஎன்எஸ் விராட்' கப்பலை கேளிக்கை விடுதியாகவோ அல்லது அருங்காட்சியகமாகவோ மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவ்வாறு ஆக்கப்பூர்வமாக ’ஐஎன்எஸ்விராட்' கப்பல் மறுவடிவம் பெறுமா? அல்லது உடைக்கப்படுமா? என்பது பாதுகாப்புத் துறை அமைச்சகம் எடுக்கும் முடிவில் உள்ளது.
    முன்னதாக, மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற ’ஐஎன்எஸ் விராட்' பிரிவு உபசார நிகழ்ச்சியில் கடற்படைத் தலைமைத் தளபதி சுனில் லம்பா உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பல்வேறு வீர-தீர சாகசங்களுக்கும், சாதனைகளுக்கும் உரித்தான அந்தக் கப்பலுக்கு அப்போது பிரியாவிடை அளிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai