சுடச்சுட

  

  கலாபவன் மணி மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரணை கோரி தம்பி உண்ணாவிரதம்

  By DIN  |   Published on : 07th March 2017 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது தம்பி ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன், கேரளத்தின் சாலக்குடி நகரில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  தமிழ் உள்ளிட்ட தென்னிந்த மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான கலாபவன் மணி, சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
  அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் அதே நாளில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
  மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திசுக்கள் ஹைதராபாதில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  அங்கு, மணியின் உடலில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்தான குளோரோபைரிஃபோஸ் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
  இந்நிலையில், மணியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி (மார்ச் 6) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் வந்து நினைவஞ்சலி செலுத்தினர்.
  இந்நிலையில், மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் தனது மூன்று நாள் உண்ணாவிரதத்தை சாலக்குடியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஓராண்டாகக் காத்திருந்தோம். உரிய நீதி கிடைக்காவிட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு முன் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai