Enable Javscript for better performance
தாணே மாநகராட்சி மேயராக சிவசேனை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தாணே மாநகராட்சி மேயராக சிவசேனை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

    By DIN  |   Published on : 07th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர மாநிலம், தாணே மாநகராட்சி மேயர், துணை மேயராக சிவசேனை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
    தாணே மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் சிவசேனை மொத்தமுள்ள 131 இடங்களில் 67-இல் வெற்றி பெற்றது. இதையடுத்து, மேயர் பதவிக்கு மீனாட்சி ஷிண்டேவையும், துணை மேயர் பதவிக்கு ரமாகாந்த் மாதவியையும் சிவசேனை வேட்பாளர்களாக அறிவித்திருந்தது.
    இந்நிலையில், மேயராக மீனாட்சி ஷிண்டேயும், துணை மேயராக ரமாகாந்த் மாதவியும் போட்டியின்றி திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
    தாணே மாநகராட்சி நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனை கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai