சுடச்சுட

    

    திஹார் சிறை வளாகத்தில் தனிமைச் சிறை இல்லை: நீதிமன்றத்தில் தகவல்

    By DIN  |   Published on : 07th March 2017 11:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திஹார் சிறை வளாகத்தில் தனிமைச் சிறை எதுவும் இல்லை என்று சிறை அதிகாரிகள் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
    ஹைதராபாதில் கடந்த 2013-இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யாசின் பட்கலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
    இதையடுத்து, தில்லியிலுள்ள திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தம்மை தனிமைச் சிறையில் வைக்கக் கூடாது என சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி யாசின் பட்கல் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    அந்த மனுவில், "தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது' என யாசின் பட்கல் குறிப்பிட்டுள்ளார்.
    இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    அப்போது, சிறை அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
    திஹார் சிறை வளாகத்தில் தனிமைச் சிறை எதுவும் இல்லை. யாசின் பட்கலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை தனிமையில் வைத்து கண்காணித்து வருகிறோம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai