சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கு: பிரஜாபதியின் இரு உதவியாளர்கள் கைது

    By DIN  |   Published on : 07th March 2017 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் இரு உதவியாளர்களை அந்த மாநில சிறப்புக் காவல் படை நொய்டாவில் கைது செய்துள்ளது.
    இதுகுறித்து காவல்துறை (சட்டம், ஒழுங்குப் பிரிவு) கூடுதல் தலைமை இயக்குநர் தல்ஜித் செளத்ரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் இரு உதவியாளர்களை நொய்டாவின் யமுனா நெடுஞ்சாலையில் ஜேவார் என்னுமிடத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்தோம்.
    அவர்கள் விசாரணைக்காக லக்னெள அழைத்துவரப்பட்டுள்ளார்கள். விரைவில், பிரஜாபதியையும் கைது செய்வோம் என்றார் அவர்.
    முன்னதாக, பிரஜாபதி வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அவரது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) காவல்துறையினர் திங்கள்கிழமை முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai