சுடச்சுட

  

  ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கோரியது உச்ச நீதிமன்றம்

  By DIN  |   Published on : 07th March 2017 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  1000

  ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
  பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பின் அந்த நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் 2017-ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி சார்பில் அப்போது அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
  இந்நிலையில், இந்தியாவில் அல்லாது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே செல்லாத ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  இதனிடையே, வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
  இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
  அப்போது, மனுதாரரின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாகக் கூறிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 10) ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai