சுடச்சுட

  

  ரிஷிகேஷ் சிவானந்த ஆசிரமத்தில் 2 மாத கால யோகாசன வகுப்பு

  By DIN  |   Published on : 07th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுவாமி சிவானந்தரால் நிறுவப்பட்ட டிவைன் லைஃப் சொசைட்டி அமைப்பின் சார்பில் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் 86-ஆவது அடிப்படை யோகாசன-வேதாந்த வகுப்புகள் வரும் மே மாதம் 4-ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
  இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சுவாமி யோகவேதாந்தானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது அமைப்பின் கீழ் வரும் யோக வேதாந்த வன அகாதெமி சார்பில் இரண்டு மாத கால அடிப்படை யோகாசன-வேதாந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ரிஷிகேஷ் நகரில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் மே மாதம் 4-ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை இவ்வகுப்புகள் நடைபெற உள்ளன.
  வகுப்புகளில் சேருவோர் ஆசிரமத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற வேண்டும். இந்தியாவைச் சேர்ந்த 20 முதல் 65 வயது வரையிலான ஆண் குடிமக்கள் இந்த வகுப்புகளில் சேரலாம். வகுப்புகளுக்கான கற்பிக்கும் மொழி ஆங்கிலமாகும்.
  எனவே வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டதாரியாக இருத்தல் விரும்பத்தக்கது. அவர்கள் ஆங்கிலத்தில் வாசிக்கவும், எழுதவும், பேசவும் திறன்வாய்ந்தவர்களாக இருத்தல் அவசியம்.
  இந்த வகுப்புக்கும், பயிற்சிக் காலத்தில் தங்கியிருப்பது மற்றும் உணவு ஆகியவற்றுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி: மார்ச் 20.
  விண்ணப்ப மனுக்களைப் பெறுவதற்கு, பதிவாளர், யோக வேதாந்த வன அகாதெமி, தி டிவைன் லைஃப் சொசைட்டி, சிவானந்தநகர் அஞ்சல், ரிஷிகேஷ், உத்தரகண்ட். பின்கோடு: 249192 என்ற முகவரிக்கு கடிதம் எழுத வேண்டும். அல்லது ஜ்ஜ்ஜ்.ள்ண்ஸ்ஹய்ஹய்க்ஹர்ய்ப்ண்ய்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai