சுடச்சுட

  

  காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி ஏற்பட்டால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

  By DIN  |   Published on : 08th March 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mehbooba

  "காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைக் கொண்டு வர உதவினால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி உறுதியளித்துள்ளார்.
  ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஸ்ரீநகரில் இளைஞர்கள் மாநாட்டை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
  அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த திரளான இளைஞர்கள் முன்னிலையில் மெஹபூபா பேசியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் பிரதமர் நரேந்திர மோடியை இங்கு அழைத்து வந்து மாநிலத்தில் நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னையை போக்க வழியேற்படுத்துமாறு வலியுறுத்துவேன்.
  உங்களுடன் நான் பரிச்சயமானவர் தான். புதியவர் அல்ல. முன்பெல்லாம் தொலைதூர பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டபோது எனக்கு அரணாக அமைந்த இளைஞர்கள்தான் இன்று எனக்கு பாதுகாவலர்களாக உள்ளனர்.
  ஆனால், இன்றைய இளைஞர்கள் கையில் கற்கள் இருப்பதைக் கண்டு வேதனை அடைகிறேன். அமைதி ஒன்றே வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னையைத் தீர்கக ஒரே வழியாகும் என்றார் மெஹபூபா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai