சுடச்சுட

  
  pranab

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8) பெண்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவிலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் பெண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், அவர்களையும் இந்த தேசத்தைக் கட்டமைப்பதில் சம அளவில் பங்களிக்கச் செய்யவும் மத்திய அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்களை அறிமுகம் செய்து அமல்படுத்தியுள்ளது.
  பெண்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை அனுபவிக்கவும் அனைத்து விதமான ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.
  மத்திய அரசு அமல்படுத்தி வரும் "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டமானது, பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், நாட்டில் பெண் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் முக்கியமான முன்முயற்சித் திட்டமாகும்.
  மற்றவர்கள் மீது இரக்கம், சகிப்புத்தன்மை, கடின உழைப்பு ஆகிய குணங்களோடு தலைமுறை தலைமுறையாக இந்தியப் பெண்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மதிப்பிட முடியாத பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
  மகளிர் தினம் என்ற இந்த நன்னாளில், பாலினச் சமத்துவம், பெண்களுக்கு உண்மையான முறையில் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள உறுதிபூணுமாறு இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
  பெண்கள் தங்கள் ழுழு செயல்திறனையும் மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் ஆதரவளிக்க நாம் அனைவரும் முயற்சியெடுப்போம் என்று அந்த அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai