Enable Javscript for better performance
திருப்பதியிலிருந்து ஜம்முதாவிக்கு புதிய விரைவு ரயில்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதியிலிருந்து ஜம்முதாவிக்கு புதிய விரைவு ரயில்

    By DIN  |   Published on : 08th March 2017 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதியிலிருந்து காஷ்மீரில் உள்ள ஜம்மு தாவிக்கு புதிய அதிவேக விரைவு ரயில் தொடங்கப்பட உள்ளதாக திருப்பதி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
    திருப்பதியிலிருந்து காஷ்மீரில் உள்ள ஜம்மு தாவி ரயில் நிலையத்துக்கு ஹம்சஃபர் என்ற புதிய அதிவேக விரைவு ரயில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    திருப்பதியிலிருந்து காஷ்மீர் செல்லும் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அனுமதி அளித்துள்ளார். இந்த ரயிலுக்காக துரந்தோ விரைவு ரயிலில் உள்ளது போல் அதி நவீன வசதி கொண்ட பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    இந்த பெட்டிகள் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை விரைவில் திருப்பதி வந்தடையும். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு இந்த ரயில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு ரேணிகுண்டா, விஜயவாடா சந்திப்பு வழியாக காஷ்மீர் சென்றடையும். இதற்கான கட்டணம் விரைவில் நிர்ணயிக்கப்படும். திருப்பதியிலிருந்து ஜம்மு தாவி செல்லும் மூன்றாவது விரைவு ரயில் இது என அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai