நீட் தேர்வு விவகாரம்: தமிழக அமைச்சர்கள் தில்லி பயணம்
By DIN | Published on : 08th March 2017 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் தில்லி சென்றுள்ளனர்.
அமைச்சர்கள் இருவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தில்லி புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சாதகமான முடிவை அறிவிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.