சுடச்சுட

  

  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம்: ஏப்ரலில் நாடாளுமன்றக் குழு அறிக்கை?

  By DIN  |   Published on : 08th March 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliment

  மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழு, அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.
  இதுகுறித்து குழுவின் தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான கே.வி. தாமஸ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறோம்.
  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் (ஏப்ரல் 12), எங்களது அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
  பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் எண்ணிக்கை, மதிப்பு ஆகிய விவரங்களையும், வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்ட நோட்டுகளின் எண்ணிக்கை, மதிப்பு ஆகிய விவரங்களையும் மத்திய ரிசர்வ் வங்கியால் இதுவரை தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
  அந்த நோட்டுகளை எண்ணிக் கொண்டிருப்பதாகவும், அதுவரை கால அவகாசம் தேவையென்றும் ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.
  எல்லாமே கணினிமயமாகிவிட்ட நிலையில், ரூபாய் நோட்டை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுவது நம்பும்படியாக இல்லை.
  இருந்தாலும், கூடிய விரைவில் இறுதியான புள்ளிவிவரத்தை அளிக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் கூறியிருக்கிறோம் என்றார் தாமஸ்.
  புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது, ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான (எண்ணிக்கையில் 1,716.5 கோடி கோடி) ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக நாடாளுமன்றத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்திருந்தார்.
  எனினும், இதுதொடர்பான துல்லியமான புள்ளிவிவரம் தன்னிடம் இல்லை என்று நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி பின்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai