சுடச்சுட

  
  shrilordramar

  பத்ராசலத்தில் உள்ள ராமர் கோயிலுக்குள் சென்று மூலவர் சிலையை சிலர் தொட்டதால் புனிதம் கெட்டுள்ளதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.
  ஆந்திர மாநிலம், பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீராமசந்திர சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை மாலை சில பக்தர்கள் சென்றனர். ஸ்ரீசீதா சமேத ராமசந்திர சுவாமியை தரிசிக்கச் சென்ற போது அந்த சந்நிதியில் அர்ச்சகர்கள் இல்லாததால், தரிசனத்துக்குச் சென்ற பக்தர்கள் கருவறைக்குள் சென்று மூலவர் சிலையை தொட்டு வணங்கினர்.
  கோயிலில் கருவறைக்கு வெளியில் உள்ள அர்த்த மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
  சந்நிதியில் அர்ச்சகர் இல்லாததால் பக்தர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்றுள்ளனர். இதைக் கண்ட சில பக்தர்கள் இதுகுறித்து கோயில் செயல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். அதனால் அப்போது கோயிலில் பணியில் ஈடுபட்டிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அளித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai