சுடச்சுட

    
    kiran

    பாகிஸ்தானில் அமைதியின்மையை இந்தியா ஏற்படுத்துவதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார்.
    இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் கைகோத்துக் கொண்டு பாகிஸ்தானில் பதற்றமான சூழலை உருவாக்கி அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திவருவதாகவும் அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிஃப் குற்றம்சாட்டினார்.
    இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்தார்.
    இதுகுறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் இந்தியாவும், ஆப்கனும் பாதிக்கப்பட்டுள்ளன. இருநாடுகளும் அமைதியை விரும்புகின்றன. இந்திய ராணுவம் ஒருபோதும் தாமாக முன்வந்து யார் மீதும் தாக்குதல் நடத்தாது' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai