சுடச்சுட

  
  draja

  இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அலட்சியம் காட்டி வருவது கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.
  இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நடுக்கடலில் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது ஆயுதங்களை பிரயோகித்து ஈவு இரக்கமற்ற வகையில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. தமிழகத்தின் ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரஸ்டோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இதுவரை இந்தியா வன்மையாகக் கண்டிக்கவில்லை. தமிழர்களும் இந்தியர்களும்தான் என்ற வகையில் இந்த பிரச்னையை மத்திய அரசு அணுக வேண்டும்.
  தமிழகம் எதிர்கொண்டு வரும் காவிரி நீர் விவகாரம், நெடுவாசல் பிரச்னை என எல்லா விவகாரங்களிலும் மத்திய அரசு அலட்சியப் போக்குடனேயே செயல்பட்டு வருகிறது. குஜராத், மகராஷ்டிரம் போல தமிழகம், புதுச்சேரி மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான். அவர்களின் உயிர், உடைமையைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்குகிறது. ஆனால், இம்முறையும் கூட்டத்தொடர் சுமுகமாக இயங்குமா எனத் தெரியவில்லை.
  இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் குரல் கொடுப்பேன் என்றார் டி.ராஜா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai